புதன், 9 ஜூன், 2010

நால்வகை ஊழிஎண் four shelves of numerical forms

'ஐ அம் பல் என வரூஉம் இறுதி அல்பெயர் எண்' - தொல்காப்பியம் 394

'பாழென காலென அரையென ஒன்றென
இரண்டென மூன்றென நான்கென ஐந்தென
ஆறென ஏழென எட்டெனத் தொண்டென
நால்வகை ஊழியெண் - பரிபாடல் 3(79)

பாழ் - ஒருவகை ஊழி
கால், அரை ... போன்றவை ஒருவகை ஊழி
ஒன்று, இரண்டு ... போன்றவை ஒருவகை ஊழி
தாமரை, வெள்ளம், ஆம்பல் போன்ற அல்பெயர் எண்ணிக்கை போன்றவை ஒருவகை ஊழி
'நிரைகளிறு ஒழுகிய நிரைய வெள்ளம்' - பதிற்றுப்பத்து 15
யானையின் எண்ணிக்கை வெள்ளம் என்க

இப்படி நால்வகை ஊழி

'ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படுவார். குறள் 989
மேலே சொன்ன 4 ஊழிகள்.

வாரம் week

உழவர்களிளிடையே 'வாரம்' என்னும் சொல் பெரிதும் பயன்படுகிறது.
நிலத்துக்காரர் விதையும் உரமும் தருவார். தொழிலாளி பயிரிடுவார். விளைச்சலை ஆளுக்குப் பாதியாகப் பங்குபோட்டு எடுத்துக்கொள்வர். இதற்குத்தான் வாரம் என்று பெயர்.

மாதத்தில் வளர்பிரை நாட்கள் 14. இதில் வாரம் 7 நாள்தானே.
தேய்பிரை நாட்கள் 14. இதில் வாரம் 7 நாள்தானே.

ஒருசிலர் 'வாரம்' என்னும் சொல்லை வடசொல் என ஒதுக்குவது ஏனோ

சனி, 5 ஜூன், 2010

'ஓம்' - அறிவியல் பார்வை

'போதாந்த தெய்வம் உயர் நாதாந்த தெய்வம்' - வள்ளலார்
'ஓசை ஒளியெலாம் ஆனாய் போற்றி'
'ஓம்' - இது பிரணவ மந்திரம்
'ஓம்' - Big Bang
ஓசையை அலைநீளத்தாலும், அழுத்த அதிர்வுகளாலும் அறிவியல் அளந்து பார்க்கிறது.
Hertz / Hz என்பது அதன் அலகு (அளவுக்குறியீடு).
மனிதர்கள் 20 முதல் 20,000 ஒலியலகுகள் இருந்தால்தான் ஓசையைக் கேட்க முடியும். 20-க்குக் குறைந்தால் மனிதர்களால் கேட்க முடியாது. சாதாரண மனிதன் 16,000 அலகுக்கு மேற்பட்ட ஒலியைக் கேட்க முடியாது. குழந்தை 20,000 அலகு வரையில் கேட்கும் திறம் பெற்றிருக்கிறது.
நாய் 35,000 அலகு வரையில் கேட்க முடியும்.
எலி 1,00,000 அலகு வரையில் கேட்க முடியும்.
யானை, திமிங்கலம் போன்றவை 20-க்குக் குறைந்த அலகுள்ள ஒலிகளை எழுப்பவும் கேட்கவும் முடியும். குறைந்த அலகுள்ள ஒலிகள் அதிக தூரம் செல்லும். இதனால் அவை அதிதொலைவிலுள்ள தன் இனத்தோடு பேசிக்கொள்ள முடியும்.
யானை 'ஓம்' என்று பிளிறுகிறது. எனவே இது போன்ற பிரணவ ஒலி பேரண்டம் முழுவதும் பரவக்கூடிய குற்றலை ஒலி infra-sound என உணர்ந்துகொள்ளலாம்.
Big Bang ஒலியின் molecular vibration நம்மால் கேட்க முடியாத 'ஓம்'

வெள்ளி, 21 மே, 2010

செருக்கு

விரும்பத்தகாத செருக்கு
யான் எனது எனது என்னும் செருக்கு அறுக்கப்பட வேண்டும் - குறள் - 346
தீவினை என்னும் செருக்குக் கொள்ள விழுமியார் அஞ்சுவர் - குறள் - 201

செருக்கும், சினமும், சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமிதம் நீர்த்து - குறள் - 431
வெண்மை எனப்படுவது ஒண்மை உடையம் யாம் என்னும் செருக்கு - குறள் - 844

விரும்பத் தகுந்த செருக்கு
உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு - குறள் 598
வேளாண்மை என்னும் என்னும் செருக்கு - குறள் - 613
பொருள், செருநர் செருக்கு அறுக்கும் எஃகு - குறள் - 759
வாழுநம் என்னும் செருக்கு - குறள் - 1193
பகைவர்கண் பட்ட செருக்கு - குறள் - 878
படைச்செருக்கு - குறள் - அதிகாரம் - 78

செவ்வாய், 11 மே, 2010

ஞால்


ஞால், ஞான்றது, ஞாற்சி என்னும் சொல் வடிவங்கள் தொல்காப்பிய உரையில் வருகின்றன.
ஞால் = தொங்கு
ஞான்றது = தொங்கிற்று
ஞாற்சி = காதில் தொங்கும் தொங்கட்டான்.
மண்ஞாட்சி = மண் குணுக்கு
பொன்ஞாட்சி = பொன்வளையம்

ஞாலம் என்னும் சொல்லை ஆராயும்போது தமிழர் உலகம் தொங்குகிறது என்று உணர்ந்திருந்தனர் என்பது புலனாகும்.

உலவுவது உலகம் என்பதும் தமிழரின் அக்கால அறிவியல் நோக்காகந் தென்படுகிறது.

ஞாயிறு, 9 மே, 2010

சுமை

எருமை மாடு சும்பபதுபோல்
எல்லா ரையும்நாம் சுமக்கின்றோம்
அருமை உதவி அதற்காக
அடிமைப் பட்டுக் கிடப்பதுவோ

பொதுவன் அடிகள்

சனி, 17 ஏப்ரல், 2010

நாம் கடவுள்

கடவுளை 'அடைவது' என்கிற சமயக் கோட்பாட்டைவிட, கடவுளாக 'ஆவது' என்கிற அத்வைதத்தை உலகம் வரவேற்கும்.

- அருட்செல்வர் டாக்டர் நா மகாலிங்கம் - தமிழர் பண்டாடு - மாதஇதழ் - ஏப்ரல் 2010